உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ்

மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ்


அட்லி இயக்கத்தில், தான் தயாரித்த விஜய் நடித்த 'தெறி' படத்தை பொங்கலுக்கு ரீ ரிலீஸ் செய்வதாக எஸ் தாணு அறிவித்தார். ஆனால், தியேட்டர் நிலவரம், வேறு சில காரணங்களால் ஜனவரி 23ல் ரிலீஸ் என்றார். நேற்று மாலை சின்ன படங்களின் நிலையை கருத்தில் கொண்டு தெறி ரிலீஸ் குறித்து முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக கூறினார். இப்போது தெறி ரீ ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தாணு வெளியிட்ட பதிவில், 'திரௌபதி 2 மற்றும் ஹாட்ஸ்பாட் 2 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ,வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 'தெறி' திரைப்பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'திரெளபதி 2' படத்தின் இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட பதிவில், 'எங்களின் வேண்டுகோளை ஏற்று விஜயின் 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்த தாணு சார் அவர்களுக்கு, என் தயாரிப்பாளர் மற்றும் எங்கள் திரெளபதி2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.

ஜனவரி 23ல் அஜித்தின் 'மங்காத்தா' ரீ ரிலீஸ் ஆகிறது. திரெளபதி 2, மாயபிம்பம், ஹாட்ஸ்பாட் 2 ஆகிய படங்களும் வருகின்றன. ஜன நாயகனை தொடர்ந்து தெறியும் வராதது விஜய் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !