கமலை பார்க்க வேண்டும் என்று சொன்னதுமே அழைப்பு வந்தது : சிங்கம்புலி
அஜித் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி போன்ற படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. அதன் பிறகு காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து திரைக்கு வந்துள்ள தாய் கிழவி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அப்போது சிங்கபுலி பேசுகையில், இப்படத்தை வெற்றி படமாக்கிய தயாரிப்பாளர் தம்பி சிவகார்த்திகேயனுக்கும், இயக்குனர் தம்பி சிவகுமாருக்கும் நன்றி. இதற்கு முன்பு நான் நடித்திருந்த மாயாண்டி குடும்பத்தார், மகாராஜா படங்களுக்கு பிறகு இந்த தாய் கிழவி படத்தில் எனது நடிப்பை பார்த்துவிட்டு நிறைய பேர் கால் பண்ணி பாராட்டினார்கள். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு ஒரு மேடையில், கமல் சாரை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக தெரிவித்திருந்தேன். அப்படி நான் சொன்ன இரண்டே நாட்களில் கமல் சார் ஆபீஸிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதையடுத்து அவரை நேரில் சென்று சந்தித்தபோது, ஏன் இதுவரை என்னை சந்திக்கவில்லை என்று கேட்டார். தொடர்ந்து நீண்டநேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இவ்வளவு பிஸியான நேரத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கி என்னை நீங்கள் சந்தித்ததற்கு நன்றி என நான் அவரிடத்தில் தெரிவித்தேன். அதற்கு அவரோ, எனக்கு சினிமா பிடிக்கும் என்று சொன்னார் என தெரிவித்தார் சிங்கம் புலி.