உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா

நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா


இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு கிடைத்த சுமாரான வரவேற்பிற்கு சுதா கொங்கரா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் இதற்கு காரணமாக விஜய் ரசிகர்களை குறை கூறினார். இதனால் சுதா கொங்கரா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இன்று ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இப்போது நடக்கும் விவகாரங்கள் குறித்து கூற வேண்டும் என்றால், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் தெளிவாக கூறினேன். விஜய் சாரின் படத்தை நானும் முதல் நாள், முதல் காட்சி சென்று பார்ப்பேன். 'ஜனநாயகன்' வெளியாகுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தணிக்கை இப்படி செய்தது தவறு, எந்தப் படத்திற்கும் அப்படி நடக்கக் கூடாது.

நாங்கள் ஜனநாயகன் படத்துடன் போட்டியிட நினைக்கவே இல்லை. நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா?. எங்களுக்கும் பண்டிகை விடுமுறை வெளியீடு தேவைப்பட்டது, அவ்வளவு தான் காரணம். விஜய் சாரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருடைய மிகப்பெரிய ரசிகை. இதில் சந்தேகமே வேண்டாம். இதை விஜய் சாரிடம் நேரில் கூட கூறியுள்ளேன். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதற்கு சூழல் இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை. என விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்துவது போன்று சுதா கொங்கரா பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2026-01-19 17:27:48

இதுக்கு பேர்தான் பல்டி ஏன் அவ்ளோ பயம்