மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா!
தமிழில் 'ஆஹா கல்யாணம்' வெப் தொடரின் மூலம் பிரபலமாகி 'இரவின் நிழல், மாஸ்டர், அயோக்யா, இட்லி கடை, மார்கன், கருடன்' உள்ளிட்ட தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பிரிகிடா சகா.
இவை அல்லாமல் தெலுங்கிலும் 'சிந்தூரம், பெத்தா கபு' என சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கின்றார் பிரிகிடா சகா. அதன்படி, இயக்குனர் லோகித் இயக்கத்தில் 'சீன் டபாக் டம் டம்' என்கிற புதிய தெலுங்கு படத்தை இன்று அறிவித்துள்ளனர். இந்த படத்தில் 'சுபம்' படத்தின் மூலம் பிரபலமான கவி ரெட்டி மற்றும் பிரிகிடா சகா என இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இன்று இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் நடிகை சமந்தா துவங்கி வைத்தார். மேலும்,இந்த பூஜை விழாவில் இயக்குனர்கள் கோபிசந்த் மலினேனி, வஷிஸ்தா, நந்தினி ரெட்டி, பி.வி.எஸ். ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்பித்துள்ளனர்.