உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி!


பாலிவுட் பட உலகில் தனக்கு படம் குறைவாக கிடைப்பதற்கு காரணமே மதவாத சிந்தனை தான் என்று ஒரு பேட்டியில் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், படைப்பாற்றல் இல்லாத நபர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதே இதற்கு காரணம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அவரது இந்த கருத்துக்கு பா.ஜ., எம்.பி.,யும் நடிகையுமான கங்கனா ரணாவத் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அதில், 'ஏ.ஆர்.ரஹ்மான் போன்று எதிர்மறையான பாரபட்சமான நபரை நான் பார்த்ததே இல்லை' என்று பதிவிட்டார். அதோடு ஹிந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் என்பவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தை மறுத்திருந்தார். அவர் கூறுகையில், 'ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இசைமேதை என்பதால் அவரை அணுக தயங்குகிறார்கள். இது ஒருவிதமான மரியாதை கலந்த அச்சமே தவிர இனவாதம் அல்ல' என்று கூறியிருந்தார்.

ஆனால் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன கருத்தை ஆதரித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''பாலிவுட்டில் மதவாதம் என்பது அதிகரித்து வருகிறது. ஜாவேத் அக்தரின் மனைவியான சபானா ஆஸ்மி உள்ளிட்ட பெரும்பாலான இந்திய முஸ்லிம்களின் அனுபவப் பூர்வமான எதார்த்தங்களுக்கு முரணாக பேசுகிறார்.
குறிப்பாக, ஷபானா ஆஸ்மி மும்பையில் முஸ்லிமாக இருந்த காரணத்தால் தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டதாக ஏற்கனவே கூறியிருந்தார். அந்த அளவுக்கு பாலிவுட் என்பது இந்த நாட்டின் சமூக எதார்த்தங்களை பிரதிபலிக்கும் ஒரு மினி இந்திய பகுதியாக இருந்து வருகிறது. அதனால் இது போன்ற அனுபவங்களை ஒதுக்கி தள்ளுவதின் மூலம் இன்றைய இந்தியாவின் உண்மை தன்மையை மாற்றிவிட முடியாது'' என்று அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !