உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்!

'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்!


ஹிந்தியில் ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் 'துரந்தர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்றதால் உடனடியாக இரண்டாம் பாகத்தையும் தொடங்கினார்கள். அதோடு வருகிற மார்ச் மாதம் 19ம் தேதி துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், 'துரந்தர் 2' படத்தின் டீசர் ஜனவரி 23ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் 'பார்டர் -2' படத்துடன் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்டர்- 2 படத்தில் சன்னி தியோல், வருண் தவான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனுராக் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !