உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்'

ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்'


எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி தி எபிக்' என்ற 3 மணி நேரம் 40 நிமிடங்கள் கொண்ட படத்தை வெளியிட்டார்கள். கடந்த அக்டோபர் 31ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் 60 கோடி வசூலித்தது. அதையடுத்து கடந்த கிறிஸ்துமஸ்க்கு இந்த படத்தின் ஹிந்தி பதிப்பை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். ஆனால் அசல் தெலுங்கு பதிப்பு இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை.

இதையடுத்து சோசியல் மீடியாவில் தெலுங்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து, பாகுபலி தி எபிக் படத்தின் தெலுங்கு பதிப்பை ஜியோ ஹாட் ஸ்டார் வாங்கி இருப்பதாகவும், அவர்கள் விரைவில் தெலுங்கு பதிப்பை வெளியிடும் தேதியை அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !