ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'?
ADDED : 13 minutes ago
'போர் தொழில்' படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'கர'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். அவர்களுடன் ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த 'கர' படத்தை வருகிற ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் அப்பட வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.