நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி
தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, தெலுங்கு, ஹிந்தியில் பிஸியானார். தற்போது மீண்டும் தமிழ் பக்கம் திரும்பிய அவர் விஜயின் 'பீஸ்ட்', சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் நாயகியாக நடித்தார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த 'கூலி' படத்தில் 'மோனிகா பெலுசி' என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில், பூஜா ஹெக்டே சொன்னதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில், ''சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான் இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய கேரவனில் அனுமதியின்றி நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். உடனடியாக அவரை நான் கன்னத்தில் அறைந்தேன். அந்த சம்பவத்திற்கு பின் அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை என அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
பூஜா ஹெக்டே குறிப்பிடும் நபர், 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்த பிரபாஸ் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த செய்தி முற்றிலும் போலியானது, பூஜா ஹெக்டே எங்கும் இதுப்பற்றி சொல்லவில்லை என்றும் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு பூஜா ஹெக்டே முன்வந்து விளக்கமளித்தால் தான் உண்மை தெரியவரும்.