பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன்
ADDED : 3 minutes ago
ரகுவரன் அறிமுகமான காலங்களில் பல படங்களில் கதை நாயகனாக நடித்தாலும் அவை குடும்ப கதாபாத்திரங்களாகவே இருந்தது. பல ஹீரோக்களின் ஆக்ஷன் படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். ஆனாலும் அவரும் ஒரு படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார் அந்த படம் மைக்கேல் ராஜ்.
'மைக்கேல் ராஜ்' என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த அவர் தன்னைச் சுற்றி நடக்கும் குற்றங்கள், ஊழல்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். வி.சி.குகநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை டி. ராமா நாயுடு தயாரித்தார். சரத் பாபு, பேபி ஷாலினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. பின்னர், வெங்கடேஷ், ரச்சனி நடிப்பில் 'பிரேம புத்ருடு, என தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.