உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு

ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு

தமிழில் 'காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே,” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தபு. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் 'ஸ்லம்டாக்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

54 வயதான தபு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் ஆண்கள் பற்றி அவர் சொன்னதாக ஒரு கமெண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. “திருமணம் வேண்டாம், கட்டிலில் மட்டும் ஆண் போதும்,” என அவர் சொன்னதாக யாரோ பரப்பிவிட்டார்கள்.

இந்நிலையில் அது குறித்து தபு தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. “மீடியாக்களே நிறுத்துங்கள். சில வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள், தபுவுக்கு சில அநாகரிகமான அறிக்கைகளைத் தவறாக இணைத்துள்ளன. அவர் அத்தகைய மேற்கோள்களை ஒருபோதும் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம், மேலும் பார்வையாளர்களை தவறாக வழிநடத்துவது நெறிமுறைகளுக்கு பெரும் மீறலாகும். இந்த வலைத்தளங்கள் போலியான மேற்கோள்களை உடனடியாக அகற்ற வேண்டும் மற்றும் தங்கள் செயல்களுக்கு முறையான மன்னிப்பு வெளியிட வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் தபு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

சமீப காலமான பரபரப்புக்காக சில யு டியூப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இப்படியான பொய்யான, போலியானவற்றை பரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !