உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 'மகாதேவி'யில் கண்ணதாசனிடம் பாடலை மாற்ற சொன்ன எம்ஜிஆர்

பிளாஷ்பேக் : 'மகாதேவி'யில் கண்ணதாசனிடம் பாடலை மாற்ற சொன்ன எம்ஜிஆர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த மிகப்பெரிய வெற்றி படம் 'மகாதேவி'. இந்தப் படத்தில் எம்ஜிஆர், கே.சாவித்திரி, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.ராஜம், ஓ.ஏ.கே. தேவர், கே.ஆர். ராம்சிங், ஜே.பி.சந்திர பாபு, டி.பி.முத்துலட்சுமி, பி.சுசீலா, ஏ.கருணாநிதி, எஸ்.எம். திருப்பதிசாமி, 'மாஸ்டர்' முரளி, கே.என்.வெங்கட்ராமன் மற்றும் என்.எஸ்.நாராயண பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் மகாராஷ்டிராவின் முன்னணி நாடக ஆசிரியர்களில் ஒருவரான ராம் கணேஷ் கட்கரி, எழுதிய 'புண்ய பிரபவ்', என்ற நாடகத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய கண்ணதாசன் நாடகத்தில் இருந்ததை விட சினிமாவில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். அதோடு ஹீரோவை விட வில்லனுக்கு அதிக பஞ்ச் டயலாக்கும் எழுதினார். ‛மணாந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி' என்ற பஞ்ச் டயலாக்களையும் வீரப்பாவுக்கு எழுதினார்.

இந்தப் படத்தில் கண்ணதாசன். நானன்றி யார் வருவார் என்ற பாடலை முதலில் எழுதினார். ஆனால் இந்தப் பாடல் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி அதில் நடிக்க மறுத்து விட்டார் எம்ஜிஆர். தனது நண்பரான கண்ணதாசனை அழைத்து வேறு பாடல் எழுதச் சொன்னார் அந்த பாடல் தான் கண்ணும் மூடும் வேளையிலே என்ற பாடல். பின்னர் கண்ணதாசன் தனது சொந்த திரைப்படமான மாலையிட்ட மங்கையில் நானன்றி யார் வருவார் பாடலைப் பயன்படுத்தினார். இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !