உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மண்ட வெட்டி' : புது பட தலைப்பு இது

'மண்ட வெட்டி' : புது பட தலைப்பு இது

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'மண்ட வெட்டி' . 'வெள்ளகுதிர' படத்தை இயக்கிய சரண்ராஜ் செந்தில்குமார் இயக்குகிறார். கோமலி பிரசாத் நாயகியாக நடிக்கிறார். இவருடன் தேனப்பன், கஜராஜ், அம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தீபக் வேணுகோபால் இசையமைக்கிறார், பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனரும், தயாரிப்பாளருமான சரண்ராஜ் கூறியதாவது : பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன்பு வெளியான புதுமையான மற்றும் தரமான படங்கள் எல்லைகள், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அனுஷ்கா ஷெட்டியின் 'அருந்ததி', கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா : சாப்டர்1' போன்ற படங்கள் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவை. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உருவாகிறது 'மண்டவெட்டி'.

இந்தப் படம் காட்சியமைப்பிலும் கதை சொல்லலிலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். டார்க், சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !