உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரணபலி'யில் ஆங்கிலேயர்களால் மறைக்கப்பட்ட வரலாறு

'ரணபலி'யில் ஆங்கிலேயர்களால் மறைக்கப்பட்ட வரலாறு

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ரணபலி'. இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

படம் குறித்து இயக்குனர் கூறியிருப்பதாவது : இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை தீவிரமான காட்சிகளுடனும் வலுவான கதை சொல்லலுடனும் படம் உருவாகி வருகிறது. குறிப்பாக, சர் ரிச்சர்ட் டெம்பிள் போன்ற அதிகாரிகளின் கீழ் திட்டமிட்டு வறட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகள் மனதை உருக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளன. ஹிட்லரின் இனப்படுகொலையை விட மோசமான கொலைகள், இந்தியாவின் பொருளாதார சுரண்டல் போன்ற வரலாற்று உண்மைகளை உணர்வுப்பூர்வமாகவும் வலுவாகவும் இருந்திருப்பது படம் பேசுகிறது.

இந்தப் படம் பீரியட் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. 19ம் நூற்றாண்டு பின்னணியில் உருவான இந்த கதை 1854 முதல் 1878 வரை நடந்த உண்மையான வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. 1850களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த சம்பவங்களை நீங்கள் வரலாற்று புத்தகங்களில் காண முடியாது. 1850-1900 காலகட்டத்தில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டது. அந்த சம்பவங்கள் மற்றும் தவறாக பழிசுமத்தப்பட்ட மனிதர்கள் ஆகியவற்றை இந்தப் படம் பேசும்.

இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. பாடநூலில் இடம்பெற்ற வரலாற்றை மீண்டும் சொல்லும் முயற்சியும் அல்ல. பல உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகள் மற்றும் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மறைக்கப்பட்ட காலத்தை சினிமா வடிவில் மீள் உருவாக்கம் செய்வது தான் இந்தப் படத்தின் நோக்கம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !