உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிரெண்டுக்கு ஏற்றபடி இசையமைப்பாளரை தேர்வு செய்தாரா தனுஷ்?

டிரெண்டுக்கு ஏற்றபடி இசையமைப்பாளரை தேர்வு செய்தாரா தனுஷ்?

திரையுலகில் அந்தந்த காலத்திற்கேற்படி ஓடிக் கொண்டிருக்கும் இயக்குனர்கள், நடிகர்களைத்தான் அதிகம் பார்க்க முடியும். ஒரு சிலர் மட்டுமே என்ன மாறினாலும் அவர்களது கூட்டணியைக் கைவிடாமல் இருப்பார்கள். பல பெரிய, முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் கூட அந்தந்த டிரெண்டுக்கு தங்களை மாற்றிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

'அமரன்' படத்தை அடுத்து தனுஷின் 55வது படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கும் பொறுப்பை தனுஷ் ஏற்றுள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கப் போகிறாரா அல்லது அனிருத் இசையமைக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

“தனுஷ் 55 படத்தில் தனுஷ் சாருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் இருக்கிறேன். இது எனது கனவு கூட்டணி. ராஜ்குமார் சார், உங்களுக்கு மிக்க நன்றி. இது மிகவும் சிறப்பான ஒரு படைப்பாக அமையப் போகிறது” என சாய் அபயங்கர் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இன்றைய இளைஞர்களின் டிரெண்டுக்கு ஏற்ப சாய் அபயங்கர் இருப்பதால் அவரைத் தேர்வு செய்திருக்கலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !