உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாவனாவின் 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' பிப்ரவரி 6ல் ரிலீஸ்

பாவனாவின் 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' பிப்ரவரி 6ல் ரிலீஸ்


கடந்த 23 ஆண்டுகளாக நடித்து வருகிறார் பாவனா. அவரின் 90வது படமாக 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவித்துள்ளனர்.

இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதை அமைந்துள்ளார்.

படத்தில், 'சாரா' என்ற கதாபாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார். உணர்ச்சி ஆழமும், புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தடயவியல் நிபுணராக அவரது நடிப்பு முக்கிய களமாக இருக்கும்.

மேலும், 'துருவங்கள் 16' படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்புகிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !