உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரதீப் ரங்கநாதன் ஆக நினைக்கிறாரா அபிஷன் ஜீவிந்த்

பிரதீப் ரங்கநாதன் ஆக நினைக்கிறாரா அபிஷன் ஜீவிந்த்

டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், ‛வித் லவ்' படத்தின் மூலம் ஹீரோ ஆகியுள்ளார். பிப்ரவரி 6ல் படம் ரிலீஸ். படத்தின் டீசர், டிரைலர் பார்த்தால் பள்ளி காதல், முன்னாள் காதலி சம்பந்தப்பட்ட கதை என்று தெரிய வருகிறது. அதில் ஜீவிந்த் நடிப்பு , பாடிலாங்குவேஜ் பிரதீப் ரங்கநாதனை போல இருக்கிறது என விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால் ஜீவிந்த் தரப்பு அதை மறுக்கிறது. படம் ரிலீஸ் ஆகாமல் எதையும் சொல்ல முடியாது.

வித் லவ் கதை வேறு ரகம். படம் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யலாம் என்கிறது. டூரிஸ்ட் பேமிலியில் இணை இயக்குனராக பணியாற்றிய மதன் இந்த படத்தை இயக்கி உள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் பணியாற்றியபோதே இந்த கதையை அபிஷன் ஜீவிந்திடம் சொன்னாராம். ஆனால் அவர் மறுத்து இருக்கிறார். அந்த படம் ஹிட்டான பின் இந்த படம் முடிவாகி இருக்கிறது. படம் ரிலீசுக்கு முன்பே கணிசமான லாபம் சம்பாதித்து இருப்பதாக தகவல். அடுத்தும் பிரதீப் பாணியில் படம் இயக்குவதை விட்டு நடிக்கப்போகிறார் அபிஷன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !