உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' நிலை, இந்த வாரம் தெரிந்துவிடுமா?

'ஜனநாயகன்' நிலை, இந்த வாரம் தெரிந்துவிடுமா?

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் எப்போது வெளியாகும் என்று திரையுலகினரும், ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே வந்தது. தனி நீதிபதி தொடர்ந்து விசாரிக்க நீதிமன்ற அமர்வு கடந்த வாரம் ஜனவரி 27ம் தேதி உத்தரவிட்டது.

தனி நீதிபதி முன்பு இந்த வழக்கு இன்னும் பட்டியலிடப்படவில்லை. எப்படியும் இந்த வாரத்தில் பட்டியலிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும் போது வழக்கை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயம், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல உள்ளது என்று ஒரு தகவல் வந்தது. அப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் பதிலையும் கேட்க வேண்டும் என தணிக்கை வாரிசயம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இதனால், வழக்கு வாபஸா, மீண்டும் மேல் முறையீடா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான விடை தெரிந்துவிடும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2026-02-02 11:52:47

மொக்க நியூஸ் எல்லாம் வேணாம்