உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா?

'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா?


புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம்சரண், ஜான்விகபூர், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் நாளை மறுநாள் ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ள தெலுங்குப் படம் 'பெத்தி'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.

இப்படத்தின் உலக அளவிலான வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தமாக சுமார் 213 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இதற்கு முன்பு ராம் சரண் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்த 'கேம் சேஞ்ஜர்' படத்தை விடவும் இது 3 கோடி குறைவு, அந்தப் படம் 221 கோடிக்கு வியாபாரம் நடந்ததாம்.

பெத்தி படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநில உரிமை சுமார் 135 கோடிக்கு நடந்துள்ளது. வெளிநாட்டு உரிமை 34 கோடி, ஹிந்தி உரிமை 25 கோடி, கர்நாடகா 17 கோடி, தமிழ்நாடு 5 கோடி, கேரளா 2 கோடி என வியாபாரம் நடந்துள்ளதாம்.

இந்த முதலீட்டை எடுக்க வேண்டும் என்றால் சுமார் 350 கோடிக்கு இந்தப் படம் வசூலித்தாக வேண்டும். இப்படத்திற்காக நிறையவே புரமோஷன் செய்துள்ளார்கள். அதனால், எப்படியும் வசூலை அள்ளிவிடலாம் என படக்குழு படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !