உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு ஆரம்பம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு ஆரம்பம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்து இயக்கும் 'டெக்ஸ்லா' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இதை படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதல் நாள் படப்பிடிப்பில் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். 'வை ராஜா வை' படத்திற்குப் பிறகு யுவன், ஐஸ்வர்யா மீண்டும் இணையும் படம் இது.

'3, வை ராஜா வை, லால் சலாம்' படங்களுக்குப் பிறகு 'டெக்ஸ்லா' படத்தை இயக்குகிறர் ஐஸ்வர்யா. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !