உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்த வெற்றிகள்… 'பரிமளா அண்ட் கோ'வுக்கும் கிடைக்குமா ?

அடுத்தடுத்த வெற்றிகள்… 'பரிமளா அண்ட் கோ'வுக்கும் கிடைக்குமா ?

2026 தமிழ் சினிமா இந்த வாரத்துடன் 100 படங்களைத் தொட உள்ளது. இதுவரையில் வெளிவந்த படங்களில் லாபத்துடன் கூடிய வெற்றியாக, “கருப்பு, தாய் கிழவி, யூத், தலைவர் தம்பி தலைமையில், வித் லவ்” ஆகிய ஐந்து படங்களே உள்ளன. கடந்த வாரம் வெளியான 'பிளாஸ்ட்' படம் 25 கோடியை வசூலித்து அடுத்த படமாக இந்தப் பட்டியலில் இணைந்துவிடும்.

கடந்த ஐந்து மாதங்களில் வெளிவந்த படங்களில் ஐந்தே ஐந்து படங்கள்தான் லாபத்துடன் கூடிய வசூலைக் கொடுத்திருப்பது அதிர்ச்சிதான். சுமார் 95 படங்களில் 5 படங்கள்தான் வெற்றி என்பது எவ்வளவு பெரிய வீழ்ச்சி.

அதேசமயம் கடந்த இரண்டு வாரங்களில் வெளியான படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று ஒரு அலையை ஏற்படுத்தியுள்ளது. மே 15ல் வெளியான 'கருப்பு' படம், மே 28ல் வெளியான 'பிளாஸ்ட்' படம் இரண்டுமே குடும்பத்து ரசிகர்களையும் கவர்ந்த படங்களாக அமைந்தன.

இந்த வாரம் ஜூன் 5ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு மற்றும் பலர் நடித்து வெளியாக உள்ள 'பரிமளா அண்ட் கோ' படமும் குடும்பத்து ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. 'கருப்பு, பிளாஸ்ட்' படங்களின் வெற்றி ராசி இந்தப் படத்திற்கும் தொடர்ந்தால் தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-06-02 20:48:27

blast படம் பரிமளா மற்றும் குழுவினர் படம் ரெண்டுமே ஒரு மாதிரி இருக்கும் போல தெரியுது .. சுபாஷ் முந்தி கொண்டாரா இல்லை பாண்டிய ராஜ் பிந்தி கொண்டாரா னு படம் வந்தால் தெரியும். blast ஒரு அதிரடி படம் ஜெயராம் ஊர்வசி இருப்பதால் பரிமளா காமெடி சரவெடி யா இருக்கும் சோ பரிமளாக்கும் ஒரு வெற்றி கனி உண்டு.. பாப்போம் சுபாஷா சபாஷா னு இல்லை பாண்டியா இல்லை போண்டியா னு