உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த ராஷ்மிகா

நயன்தாரா சம்பளத்தை 'ஓவர்டேக்' செய்த ராஷ்மிகா


தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக முதலிடத்தில் இருந்தவர் நயன்தாரா. அவரது அதிகபட்ச சம்பளம் 12 கோடி என கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தற்போது ராஷ்மிகா மந்தனா 'ஓவர்டேக்' செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. 'காக்டெயில் 2' ஹிந்திப் படத்திற்காக ராஷ்மிகாவுக்கு 15 கோடி சம்பளம் தந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

ராஷ்மிகா நடித்து வெளிவந்த ஹிந்திப் படங்களான 'அனிமல், ச்சாவா' ஆகிய படங்கள் வசூலை அள்ளிக் குவித்தன. அதனால்தான் அவருக்கு இவ்வளவு அதிகமாக சம்பளம் கொடுத்துள்ளார்களாம்.

இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக தற்போதைக்கு பிரியங்கா சோப்ரா இருக்கிறார். 'வாரணாசி' படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 25 கோடிக்கும் அதிகமான சம்பளம் பேசியுள்ளதாகத் தகவல். அவருக்கடுத்து 'ராக்கா' படத்தில் நடிக்க தீபிகா படுகோனோவுக்கு 20 கோடி சம்பளம் என்கிறார்கள்.

இருந்தாலும் கதாநாயகர்களின் சம்பளமான 200 கோடியுடன் ஒப்பிடும் போது நடிகைகள் அதில் 10 சதவீதம் மட்டுமே பெறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !