உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'போக்கிரி' என்னை ஸ்டார் ஆக்கியது: மகேஷ் பாபு

'போக்கிரி' என்னை ஸ்டார் ஆக்கியது: மகேஷ் பாபு


ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'வாரணாசி'. இப்படம் 2027 ஏப்ரல் மாதம் 7ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பை முன்னிட்டு ஹாலிவுட் மீடியாக்களுக்கு மகேஷ், பிரியங்கா, பிருத்விராஜ் உள்ளிட்டோர் பேட்டிகளைக் கொடுத்துள்ளார்கள்.

அதில் ஒரு பேட்டியில் 'போக்கிரி' படம் தான் தன்னை ஸ்டார் ஆக்கியது என மகேஷ்பாபு தெரிவித்துள்ளார். “2006ல் வெளிவந்த 'போக்கிரி' படம் என்னை மாற்றியது. அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தை எனக்குள் ஏற்படுத்தியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்க முடியாத ஒரு கட்டத்திற்குள் என்னை நுழைய வைத்தது. ஒவ்வொரு படமும் நமது 'மைண்ட் செட்'ஐ மாற்றிவிடும். இப்போது 'வாரணாசி' எனக்கு வேறு விதமான ஒரு பெரும் அனுபவத்தைக் கொடுத்து வருகிறது,” என்றார்.

பூரி ஜெகன்நாத் இயக்கிய 'போக்கிரி' திரைப்படத்தில் இலியானா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். அந்தப் படம் தமிழில் பிரபுதேவா இயக்க விஜய், அசின், பிரகாஷ் ராஜ், நாசர் நடிக்க ரீமேக் ஆகி 2007ல் வெளிவந்தது. இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது.

'போக்கிரி' இயக்குனர் பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் சேதுபதி, தபு, சம்யுக்தா நடிக்க 'ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு' படத்தை இயக்கி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !