உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' பட விழாவில் விஜய்சேதுபதி

‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' பட விழாவில் விஜய்சேதுபதி

பிரஜன், புகழ் இணைந்து நடிக்கும் புதிய படம் ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி'. இதை யோகேஸ்வரன் மைனர் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். அவர் பேசுகையில், ‛‛என் நண்பர்கள் பிரஜன், புகழ் நடிக்கிறார்கள். டிரைன் படத்தில் இந்த பட ஹீரோயின் ஜனனி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை. அனைவரும் என் நண்பர்கள். படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்றார்.

பிரஜனும், விஜய்சேதுபதியும் பல ஆண்டு நண்பர்கள். நடந்து முடிந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட இவர்களின் நட்பு வெளிப்பட்டது. அதனால் அவர் படவிழாவுக்கு வந்ததாக தகவல். இந்த விழாவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் விக்ரம், சான்ட்ரா, ரம்யா, மதுமிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !