உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் மூன்று இளம் பெண்கள் தற்கொலை ; சோனு சூட் வருத்தம் கலந்த எச்சரிக்கை

ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் மூன்று இளம் பெண்கள் தற்கொலை ; சோனு சூட் வருத்தம் கலந்த எச்சரிக்கை


சமீப காலமாகவே ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் பலரும் அடிமையாகியும் அதில் பலர் பெரிய அளவில் பணத்தை தொலைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வதும் அவ்வப்போது செய்திகளாக வந்து போகின்றன. இந்த நிலையில் இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் ஒரே வீட்டுச் சேர்ந்த மூன்று சகோதரிகள் 'கொரியன் லவ் கேம்' என்கிற விளையாட்டை விளையாடியதற்கு அவரது தந்தை தடை செய்ததால் அந்த வருத்தத்தில் மூவருமே தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்துள்ளனர். இந்த நிகழ்வு உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் சோனு சூட் இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மூன்று இளம் பெண்கள் காசியாபாத்தில் இன்று தங்களது வாழ்க்கையை தொலைத்து இருக்கிறார்கள். வன்முறை காரணம் அல்ல.. ஏழ்மை காரணம் அல்ல.. ஆனால் ஆன்லைன் விளையாட்டும் டிஜிட்டலுக்கு அடிமையானதும் கொடுத்த வெளியே தெரியாத அழுத்தம் தான் இதற்குக் காரணம்.

நான் பலமுறை இதற்காக முன்பே குரல் கொடுத்திருக்கிறேன். இப்போதும் மறுபடியும் சொல்கிறேன்.. சோசியல் மீடியா மற்றும் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்துவதற்கு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். குழந்தைகளுக்கு தேவை வழிகாட்டுதல் தானே தவிர கணக்கீடுகள் அல்ல.. இது யாரையும் குற்றம் சாட்டுவதற்காக அல்ல.. பாதுகாப்பு குறித்தது. இதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை போல இதையும் ஒரு தலைப்புச் செய்தியாக கடந்து செல்லக்கூடாது.. செயலாற்ற வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !