உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவீனா ரவிக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த மர்ம ஆசாமிகள்

ரவீனா ரவிக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த மர்ம ஆசாமிகள்

திரை உலகில் டப்பிங் ஆர்டிஸ்டாக இருப்பவர் ஸ்ரீஜா ரவி. அவரை தொடர்ந்து அவரது மகள் ரவீனா ரவியும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர், அதன் பிறகு வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் என பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். தற்போது தனது இணைய பக்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னையும் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் தொந்தரவு செய்து வந்த சில மர்ம ஆசாமிகள் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் ரவீனா ரவி.

அதில், சபரீஷ் என்ற நபரும் அவரது சகோதரர்களும் தொடர்ந்து என்னை மட்டுமின்றி எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஆன்லைனில் துன்புறுத்தி வருகிறார்கள் . அருவருப்பான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இது என்னையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதற்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்தபோதிலும் அவர்களின் தொந்தரவு குறையவில்லை. மீண்டும் மீண்டும் புதிய சமூக வலைதள கணக்குகள் மூலம் எங்களை தொடர்பு கொண்டு வருகிறார்கள். இது போன்ற நபர்களிடமிருந்து எந்த மாதிரி தகவல் வந்தாலும் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அந்த கணக்குகளை பிளாக் செய்து அவர்கள் மீது புகார் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செய்தியை வெளியிட்டுள்ளேன்.

மேலும், சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று கூறப்படும் நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருக்கும் நடிகை ரவீனா ரவி, இந்த பதிவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை சைபர் கிரைமுக்கும் டேக் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !