உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா

மீண்டும் அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா, புஷ்பா 2 படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது காக்டெயில் 2, மைசா போன்ற படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர விஜய் தேவரகொண்டாவின் ரணபலி படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தில் அவர் இணையப் போகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா ஒரு எதிர்மறை வேடத்தில் நடிக்கிறாராம். தற்போது மும்பையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் அட்லி. இதையடுத்து அல்லு அர்ஜுன் மற்றும் ஜான்வி கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இப்படி முதல் முறையாக அல்லு அர்ஜுன் படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா நடிப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !