பிளாஷ்பேக் : பாகவதர் இரட்டை வேடத்தில் நடித்த ஒரே படம்
ADDED : 206 days ago
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவர் நடித்த மூன்றாவது படம் 'சத்தியசீலன்' (அல்லது தந்தை சொல் மறவா தனயன்) 1936ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் தியாகராஜ பாகவதர் இரண்டு வேடங்களில் நடித்தார். அதன்பிறகு எந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கவில்லை. அவருக்கு ஜோடியாக தேவசேனா நடித்திருக்கிறார்.
பாகவதற்கு சொந்தமான திருச்சி தியாகராஜா பிலிம்ஸ் தயாரித்தது. எம்.பி.மோகன்ஜி, பத்மாவதி பாய், எம். ராமசாமி ஐயா, டி. வி. காந்திமதி பாய், எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தனது முதல் இரண்டு படத்தின் சம்பளத்தை கொண்டு ரூபாய் 59 ஆயிரம் செலவில் இந்த படத்தை தியாகராஜ பாகவதர் தயாரித்தார். படம் தோல்வி அடைந்ததால் அதன் பிறகு இரண்டு வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.