காவல் நிலையத்தில் நடக்கும் கதை
போலீஸ் கதைகள் ஏராளமாக வந்த போதிலும் காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு சில படங்களும் வெளிவருகிறது. அப்படியான ஒரு படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வருகிறார்கள். இந்தப் படம் காவல் நிலையத்தில் நடக்கும் ஒரு காதலைப் பற்றியதாக உருவாகிறது.
இயக்குனர் அறிவழகனிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி நடிக்கும் படதை பயர்பாக்ஸ் பிலிம் ஹவுஸ் சார்பில் சரணிகா தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. நாயகியாக சாய் யோகியா நடிக்கிறார். இவர்களுடன் ஆ.வெங்கடேஷ், அருவி மதன், கிரிஜா ரவி, தணிகை ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புதுவிதமான கதைகளம், சுவாரஸ்யமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, ஆக்ஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்'' என்றார்.