‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம்
ஏஆர்கே புரொடக்சன் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் பெருமாள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ஊருக்கு ரெண்டு ஊதாரி என்று தலைப்பு வைத்துள்ளனர். பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பிக் பாஸ் மூலம் பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் விக்ரம் விஜய் முக்கியம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குனர் யோகேஸ்வரன் கூறியதாவது : இது முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக உருவாக இருக்கிறோம். பொதுவாகவே ஊருக்கு ரெண்டு ஊதாரி இருப்பார்கள், ஆனால் ஒரே வீட்டில் ரெண்டு ஊதாரி இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸ்யமான முழு நீள காமெடி படமாக எடுக்கவிருக்கிறோம். சினிமா ரசிகன் இரண்டு மணிநேரம் தன்னை மறந்து சிரித்து மகிழவேண்டும் என்று தான் எதிர் பார்க்கிறாரன். அப்படி சினிமா ரசிகனை முழு என்டர்டெயின்மென்ட் செய்யும் படமாக இது இருக்கும் என்றார்.
இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது இதில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.