உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

அசுரன், விடுதலை 2 மற்றும் வாத்தி படங்களில் நடித்தவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸின் மகன். தற்போது யூத் என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீதேவி, அனிஷ்மா அனில்குமார், சுராஜ் வெஞ்சார மூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். பள்ளிக்கூட பின்னணியில் நடக்கும் காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதில், முட்ட கலக்கி என்ற பாடலை தானே எழுதி கென் கருணாஸ் பாடியிருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் பிப்ரவரி 7ம் தேதியான நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !