உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு


ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கருப்பு'. இப்படத்தின் டீசர் கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியானது. டீசர் வெளியான அடுத்த சில வாரங்களில் டிரைலர், படத்தின் இசை ஆகியவற்றை வெளியிட்டு, அதற்குப் பின் படத்தை வெளியிடுவதும் வழக்கம். ஆனால், ஏழு மாதங்கள் ஆன பின்பும் இந்தப் படத்தின் வெளியீடு பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மட்டும், ஒரு வாரத்திற்கு முன்பு, “கருப்பு' படத்தின் பைனலைத் தற்போது பார்த்தேன். காத்திருப்பிற்கு தகுந்தது,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். படத்தின் பின்னணி இசை வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தின் ஓடிடி மற்றும், சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவை விற்பனையில் நடந்த இழுபறிதான் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தாமதம் எனத் தெரிகிறது. மேலும், படத்தில் இடம் பெறும் விஎப்எக்ஸ் காட்சிகளின் வேலைகளும் திட்டமிட்டதை விட தாமதமாக நடந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவையும் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாம். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.

‛டி 20' உலகக்கோப்பை, முழு ஆண்டுத் தேர்வு, மார்ச் மாதம் 'டாக்சிக்' வெளியீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளியீட்டுத் தேதி இருக்கலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !