உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா?

'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா?


விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு 'டாக்சிக்'. கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநில வினியோக உரிமை 120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் சார்பாக செய்தி அனுப்பப்பட்டிருந்தது. அது தெலுங்குத் திரையுலகினருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

யஷ் நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் 1000 கோடிக்கு மேல் வசூலித்த ஒரு படம். தெலுங்கு மாநிலங்களில் அந்தப் படம் மொத்தமாக 130 கோடி வசூலித்ததாம். படத்தின் வியாபாரம் சுமார் 75 கோடிக்கு மேல் நடந்து நிகர வசூலாக 80 கோடிக்கும் சற்றே கூடுதலான தொகை தான் கிடைத்ததாம். படம் தந்த மொத்த லாபமே 5 கோடிக்கு சற்றே கூடுதல்தான் என்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது படத்தின் வியாபாரம் மட்டுமே 120 கோடிக்கு நடந்துள்ளதை நம்ப முடியவில்லை என்று சொல்கிறார்கள். 'கேஜிஎப் 2' படத்தின் மொத்த வசூலே 130 கோடி என்றிருக்கும் போது அதற்கு 10 கோடி குறைவாக 'டாக்சிக்' படத்தை எப்படி வாங்கியிருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

இந்தப் படத்தை வாங்கியிருக்கும் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் தில் ராஜு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் வசூல் நிலவரம் பற்றி நன்கு அறிந்தவர். மேலும், இவ்வளவு அதிக தொகை கொடுத்து அவர் வாங்கியிருக்கவே மாட்டார் என்றும் அடித்துச் சொல்கிறார்கள். படத்தின் பில்டப்பிற்காக இப்படி சொல்கிறார்கள் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

படம் வெளியாகி வசூல் நிலவரம் வரும் போதுதான் இவ்வளவு விலை சரியா, தவறா என்பது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !