2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்…
2026ம் ஆண்டின் முதல் வெற்றி, முழுமையான வெற்றி என்ற பெயரைப் பெற்ற படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. பொங்கலுக்கு விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் வரவில்லை என்றதும் இந்தப் படத்தை திடீரென களத்தில் விட்டார்கள்.
ஒரு பக்கம் 'பராசக்தி' ஓடிக் கொண்டிருக்க, மறுபக்கம் 'வா வாத்தியார்' வெளியாகி ஒரு நாள் ஆகியிருக்க, 'தலைவர் தம்பி தலைமையில்' ஜனவரி 15ம் தேதியன்று வெளியானது.
ஓர் இரவில் நடக்கும் கதை, ஒரே கதைக்களம், சில கதாபாத்திரங்கள் மட்டுமே இருந்தாலும் ஒரு சுவாரசியமான திரைக்கதை, காட்சிகளுடன் படம் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
'பராசக்தி' படம் சீரியசான படமாக இருக்க, 'வா வாத்தியார்' என்னமோ சொல்ல, இந்த 'தலைவர் தம்பி' தந்த நகைச்சுவை ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.
சுமார் 10 கோடி செலவில் தயாரான படம் 40 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள். படம் வெளியாகி இன்றுடன் 25 நாளாகிறது. ஒரு வெற்றிகரமான ஓட்டத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ள இந்தப் படம் அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.