உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா'

ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா'

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ‛குபேரா'. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பிச்சைக்காரரான தனுஷை பயன்படுத்தி நடக்கும் கதை. இந்தப்படம் தெலுங்கில் வரவேற்பை பெற்றது. தமிழில் சுமார் ரகம் என்ற அளவில் தான் இருந்தது. இருப்பினும் படம் ரூ.100 கோடி வசூலை கடந்தது. இந்த நிலையில் குபேரா படத்தை வருகின்ற ஏப்ரல் 17ம் தேதியன்று ஜப்பானில் வெளியிடுவதாக ஜப்பான் மொழியில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். சமீபத்தில் புஷ்பா 2 ஜப்பானில் வெளியானது. ஆனால் வரவேற்பை பெறவில்லை. வெறும் 6 முதல் 7 கோடி மட்டுமே வசூலை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !