அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்
ADDED : 195 days ago
மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வாரணாசி படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சமீபத்தில் அவர் ஒரு பேட்டி அளித்தார். அதில் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் தான் இயக்கி வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை அனிமேஷனில் உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்குவதற்காக ஜப்பானில் உள்ள சில ஸ்டுடியோக்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தற்போது இயக்கி வரும் வாரணாசி படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் அனிமேஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளதாம்.