உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்பு கட்டளை போட்ட தபு ; 100வது படத்தில் கிரீன் சிக்னல் கொடுத்த நாகார்ஜுனா

அன்பு கட்டளை போட்ட தபு ; 100வது படத்தில் கிரீன் சிக்னல் கொடுத்த நாகார்ஜுனா


தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனா அவரது திரையுலக பயணத்தில் தற்போது நூறாவது படத்தை தொட்டுள்ளார். தற்காலிகமாக 'கிங் 100' என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் 'நித்தம் ஒரு வானம்' என்கிற படத்தை இயக்கிய ரா கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகை தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதை உறுதிப்படுத்தியுள்ளார் நாகார்ஜுனா.

தெலுங்கில் நடிகை தபு நடித்ததே பத்துக்கும் குறைவான படங்களில் தான். இதில் நாகார்ஜுனாவும் தபுவும் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்கள். அதேசமயம் கிட்டத்தட்ட 28 வருடங்களாக இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இவர்களுக்குள் உள்ள நட்பு இப்போதும் கொஞ்சம் கூட குறையவில்லை.

இந்த நிலையில் தான் நாகார்ஜுனா தனது நூறாவது படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை கேள்விப்பட்ட தபு இந்த படத்தில் நானும் இடம் பெற வேண்டும் என தனக்கு அன்பு கட்டளை போட்டு விட்டதாகவும் அதை தன்னால் மீற முடியவில்லை. அவரும் இந்த படத்தில் இருக்கிறார் என்றும் நாகார்ஜுனா உறுதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !