இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா!
ADDED : 139 days ago
நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழி படங்களைக் கடந்து தற்போது தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது 'காக் டைல் 2' என்கிற ஹிந்தி படத்தில் சாகித் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து உடனடியாக மீண்டும் ராஷ்மிகா மந்தனா, சாகித் கபூர் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 'பதாய் ஹோ, மைதான்' படத்தை இயக்கிய அமித் ரவீந்திரநாத் ஷர்மா இந்த படத்தை இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் காதல், காமெடி கதைக்களம் கொண்ட படமாக உருவாகிறது என்கிறார்கள்.