ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி!
ADDED : 10 hours ago
இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி தனது அக்கா மகன் அஜய் தீஷனை கதாநாயகனாக வைத்து தயாரித்துள்ள படம் 'பூக்கி'. இப்படம் வருகின்ற பிப்ரவரி 13ந் தேதியன்று திரைக்கு வருகிறது.
இதற்காக விஜய் ஆண்டனி மற்றும் படக்குழு தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அப்போது விஜய் ஆண்டனி ஒரு பேட்டியில் கூறுகையில், சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் முதலில் ஜி.வி. பிரகாஷூக்கு மாமா கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தான் இயக்குனர் சசி அழைத்தார். அப்போது ஒரு சில காரணங்கள் அது நடக்கவில்லை. அதன் பின்னர் தான் நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார் எனக் கூறினார்.