உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்!

கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்!


தமிழில் 'டிராகன்' படத்தில் அறிமுகமான கயாடு லோஹர், அதன் பிறகு 'இதயம் முரளி, இம்மார்ட்டல், எஸ்டிஆர்-49' போன்ற படங்களில் நடிக்கிறார். மேலும், ஏற்கனவே தெலுங்கில் 'அல்லூரி' என்ற படத்தில் நடித்திருந்த கயாடு லோஹர் தற்போது 'பங்கி' என்ற படத்தில் விஷ்வக் சென்னுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நேற்று திரைக்கு வந்த இந்த படத்தில் கயாடு லோஹரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்த போதும், கயாடு லோஹர் மிக சிறப்பாக நடித்திருப்பதாகவும், அவரது கவர்ச்சிகரமான நடிப்பு இளவட்ட ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருப்பதாகவும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தெலுங்கில் முதல் படத்தில் கிடைக்காத பாராட்டு இரண்டாவது படத்தில் அவருக்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் இளவட்ட ரசிகர்களை வசியப்படுத்தும் வகையில் கயாடு லோஹர், கிளாமர் கலந்த ரோலில் நடித்திருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கே.வி.அனுதீப் இயக்கியுள்ள இந்த படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு கதையில் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !