உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர்

சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர்


மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்தது கடந்த 2014ல் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்கிற படத்தில் தான். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2016ல் வெளியான 'வேட்ட' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த நிலையில் 10 வருடங்கள் கழித்து தற்போது மலையாளத்தில் உருவாகும் 'நேரே செவ்வா' (நேரா செவ்வாய் கிரகத்துக்கு) என்கிற படத்திற்காக இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

சயின்ஸ் பிக்சன் காமெடியாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. நிச்சயமாக காமெடிக்கு இந்த படம் உத்தரவாதம் தரும் என்பது டீசரை பார்க்கும்போது தெரிகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சித் வர்மா என்பவர் இயக்குகிறார். இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் இயக்குனரான நிதிஷ் சகாதேவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !