தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த்
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கதாநாயகியாக மாறியவர் கன்னட நடிகை ருக்மணி வசந்த். கடந்த வருடம் தமிழில் 'ஏஸ்' மற்றும் 'மதராஸி', கன்னடத்தில் 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'டிராகன்' படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் ருக்மணி வசந்த்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நடிகர் சர்வானந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ருக்மணி வசந்த். இந்த படத்தை இயக்குனர் சீனு வைத்லா இயக்குகிறார். பீரியட் ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.