தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு பிப்ரவரி 22ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த தேர்தல் நடக்கிறது. இதில் இப்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் லைகா தமிழ் குமரன் தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன. வழக்கம்போல் தேர்தல் பணிகள், போட்டிகள் களை கட்டி உள்ளன.
இந்நிலையில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டுவிடும் ஜே. எஸ். கே சதீஷ்குமார் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுகளை பெற பணம் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறது குறிப்பாக ஒரு அணி சார்பில் 600 பேரை தேர்ந்தெடுத்து ஒட்டுமொத்தமாக தாங்கள் ஜெயிக்க 30 ஆயிரம் வரை பணம் கொடுக்கிறார்கள் அதுபோக பல்வேறு பதவிகளின் நிற்பவர்கள் பட்டுப்புடவை, வாட்ச், மிக்ஸி, 5000 ஆயிரம் பணம் உள்ளிட்ட பல பரிசுகளை தருகிறார்கள் என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.