உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை

பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை

1950 மற்றும் 1960களில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் டெய்சி ராணி. பந்திஷ் (1955), ஏக் ஹி ராஸ்தா (1956), நயா தார் (1957), ஹம் பஞ்சி ஏக் தால் ஹே (1957),ஜெயிலர் (1958), கைதி நம்பர்.911 (1959) மற்றும் து உஸ்தாத் (1959) போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர். இவரது தங்கை ஹனியும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

அன்றைய காலகட்டத்தில் ஹீரோயின்களுக்கு இணையான சம்பளம் பெற்றவர்கள் இருவரும். குழந்தை நட்சத்திரமாக உச்சத்தில் இருந்த டெய்சி ராணி ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்கவில்லை. பல படங்களில் இரண்டாவது நாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் மட்டுமே நடித்தார்.

திருமணம் செய்து கொண்ட பின் திரைப்படத்தை விட்டு விலகிய இவர் பல வருடங்களுக்குப் பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

தமிழில் இவர் நடித்த ஒரே படம் 'யார் பையன்' இந்தப் படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கினார். வசனத்தை ஸ்ரீதர் எழுதினார். இதில் ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்தனர். இவரின் அழகுக்காகவும் சுட்டித்தனமான நடிப்பிற்காகவும் படம் பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !