உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா?

ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா?


நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தாய் கிழவி'. இப்படத்தை முதலில் பிப்ரவரி 20ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து, திடீரென பிப்ரவரி 27ம் தேதிக்கு மாற்றினார்கள்.

பட வினியோகம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பமே அதற்குக் காரணம் என திரையுலகில் சொன்னார்கள். படத்தை வெளியிடுவதாகப் பேசி ஒரு வினியோகஸ்தர் அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துள்ளார். ஆனால், மீதித் தொகையைத் தருவதில் தாமதம் ஏற்படவே படத்தைத் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு விற்றார்களாம்.

ஆனால், முதலில் படத்தை வெளியிடுவதாகச் சொல்லி அட்வான்ஸ் தந்த வினியோகஸ்தர் தற்போது பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளாராம். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுதன் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் பின்னர் பேசிக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால், தற்போது திடீரென வேறு ஒருவருக்குப் படத்தைக் கொடுத்துவிட்டார்கள் என வினியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம்.

தற்போது படத்தின் பஞ்சாயத்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதில் சுமூக முடிவு எட்டப்படலாம் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !