உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா

முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா கிராபிக் டிசைனராக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'கோச்சடையான்' படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பிறகு கோவா படத்தை தயாரித்தார். வேலையில்லா பட்டதாரி 2, படத்தை இயக்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் உடன் இணைந்து அவர் தயாரித்துள்ள படம் 'வித் லவ்'.

'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்த இந்த படம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சவுந்தர்யா தனது சக தயாரிப்பாளர்களுடன் இணைந்து தமிழக முதல்வரை சந்தித்து படத்தின் வெற்றிக்கு வாழ்த்தும், ஆசியும் பெற்றார். 'வித் லவ்க் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார் முதல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2026-02-23 16:35:10

அதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் ரஜினி பொண்ணுன்னா அதும் இந்த தேர்தல் நேரத்துல இப்படி பண்றது சரியில்ல சௌந்தர்யா