ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன்
ADDED : 1 hours ago
கடந்த 2002ம் ஆண்டில் நடிகர் அர்ஜூன் இயக்கி, நடித்து தமிழில் வெளியான படம் 'ஏழுமலை' . இதில் சிம்ரன், விஜயகுமார், மும்தாஜ், கஜாலா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். அந்த காலகட்டத்தில் இது கமர்ஷியல் வெற்றி படமாகவும் அமைந்தது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்க்கு இந்த படத்தில் இடம்பெற்ற மணிசர்மா பின்னணி இசையில் அர்ஜூன் நடந்து வரும் காட்சிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது ஏழுமலை இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அர்ஜூன் ஈடுபட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அர்ஜூன், ‛ஜெய்ஹிந்த் 2' படத்தை இயக்கி சொதப்பினார். அந்த மாதிரி இல்லாமல் ஒரு கமர்ஷியல் ஆக் ஷன் ட்ரீட் உடன் வந்தால் ரசிகர்களை கவரும்.