கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள முக்கியமான சங்கங்களில் ஒன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்திலிருந்து சிலர் பிரிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என புதிய சங்கத்தை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தாலும் பழைய பாரம்பரி சங்கத்தில்தான் அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஞாயிறு பிப்ரவரி 22ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
தற்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி, தற்போதைய துணைத் தலைவர் ஜிகேஎம் தலைமையில் ஒரு அணி என இரண்டு அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறதாம். அதே சமயம் முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் சில சுயேச்சை வேட்பாளர்களும் சவாலாக இருக்கிறார்களாம்.
சென்னையில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது.