உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை

தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று (பிப்.,22) நடக்கிறது. சென்னை தனியார் கல்லூரியில் ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் முரளி ராமசாமி, தமிழ் குமரன் தலைமையில் இரண்டு அணிகள் மோதுகின்றன ,1540 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள்.

தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், இணை செயலாளர் செயற்குழு உறுப்பினர்கள் 26 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு நிறைவடைகிறது. அதை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இன்று இரவுக்குள் முக்கிய நிர்வாகிகளுக்கான ஓட்டு முடிவுகள் வெளிவர வாய்ப்பு. நாளை செயற்குழு உறுப்பினர்கள் யார் என்று தெரிய வரும். இப்போதைய தலைவர் முரளி ராமசாமி வெற்றி பெறுவாரா, லைகா தமிழ் குமரன் வெற்றி பெறுவாரா என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !