உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சரஸ்வதி' பட விழாவில் தெலுங்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார்

'சரஸ்வதி' பட விழாவில் தெலுங்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார்


நடிகர் சரத்குமாரின் வாரிசாக சினிமாவில் அறிமுகமானாலும் கூட ஆரம்பத்தில் ஒரு தேக்கத்தை சந்தித்தவர் தான் வரலட்சுமி சரத்குமார்.. பின்னர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கி முக்கியமான நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கே நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் முதன்முறையாக டைரக்ஷனில் இறங்கி ‛சரஸ்வதி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் வரலட்சுமி. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய வரலட்சுமி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கோபிசந்த் மாலினேனிக்கு நன்றி சொல்லி கண் கலங்கினார்.

இந்த நிகழ்வில் வரலட்சுமி பேசும்போது, “ஆரம்பத்தில் எனக்கு சரியான வாய்ப்புகள் வராவிட்டாலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதற்கு காரணம் அந்த சமயத்தில் தன்னுடைய 'கிராக்' படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து வாய்ப்பு அளித்த இயக்குனர் கோபிசந்த் மாலினேனி தான். அதன்பிறகு தான் எனக்கு இரண்டு டஜன் படங்கள் தேடி வந்தன. இன்று நீங்கள் இல்லாமல் இந்த இடத்தில் நான் இல்லை.. என்னுடைய திரையுலக பயணத்தை நீங்கள் மீண்டும் துவங்கி வைத்து உண்மையான பயணத்தை கொடுத்தீர்கள்” என்று கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !